முகப்பு
இந்தியா

கேரளத்தில் 10 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

​கேரளத்தில் புதிதாக 5,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
கோப்புப்படம்
பகிர்:


கேரளத்தில் புதிதாக 5,214 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 6,475 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,77,394 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,09,102 பேர் குணமடைந்துள்ளனர், 3,902 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இன்றைய தேதியில் 64,131 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 69,844 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.47 சதவிகிதமாக உள்ளது. இதுவரை மொத்தம் 1,02,14,097 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பிய எவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments