டிராக்டர் பேரணி: கருத்துக் கூறியவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை 
இந்தியா

டிராக்டர் பேரணி: கருத்துக் கூறியவர்களை கைது செய்ய இடைக்காலத் தடை

தில்லி டிராக்டர் பேரணி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

PTI

தில்லி டிராக்டர் பேரணி குறித்து தவறான கருத்துகளை பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டோரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

டிராக்டர் பேரணியில் உண்மைக்கு புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி 26-ஆம் தேதி புது தில்லியில் டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. தில்லியில் குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் ஒரு விவசாயி உயிரிழந்த நிலையில்,  காவலர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் டிராக்டர் பேரணியின்போது உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மற்றும் 6 பத்திரிகையாளர்கள் மீது உத்தரப் பிரதேச காவல்துறை சார்பில் தேசதுரோக வழக்கு பதிந்துள்ளது.

சர்தேசாய், ம்ரிநல் பாண்டே, விநோத் கே ஜோஷ், அனந்த் நாத், பரேஷ் நாத் உள்ளிட்ட 6 பத்திரிகையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவர்களைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிராக்டர் பேரணியின்போது சுட்டுரையின் மூலம் அவர்கள் பதிவிட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகள் காவல்துறையினர் மீதும், ராணுவத்தினர் மீதும் கலங்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சசி தரூர் உள்ளிட்டவர்கள் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT