விவசாயிகளின் நோக்கம் மத்தியில் ஆட்சி மாற்றமல்ல: டிகாயத்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என பாரதிய கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிவசாயிகளின் நோக்கம் மத்தியில் ஆட்சி மாற்றமல்ல: டிகாயத்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என பாரதிய கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு மத்தியில் ஆட்சி மாற்றத்தை உண்டாக்குவது நோக்கமல்ல என பாரதிய கிஸான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிகாயத் தெரிவித்துள்ளார்.
தில்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் மத்தியில் அவர் பேசியது:
"மத்தியில் ஆட்சி மாற்றத்தை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. அரசு அதன் பணியைச் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயத் தலைவர்கள் அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கும் வரை போராட்டங்கள் நீடிக்கும்.
நாடு முழுவதும் 40 லட்ச டிராக்டர்களுடன் பெரிதளவில் கூட்டங்கள் நடத்தி போராட்டங்கள் விரிவுபடுத்தப்படும். இந்த இயக்கத்தைப் பரப்புவதற்காக விவசாயத் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வார்கள்" என்றார் அவர்.