உ.பி. சஹரான்பூரில் ஏப்ரல் 5 வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு
உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் நடைபெற்று வரும் மகாபஞ்சாயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் சஹரான்பூரில் நடைபெற்று வரும் மகாபஞ்சாயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இந்த மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சஹரான்பூரில் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் சட்டம் ஒழுங்கு சிக்கல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் இது ஒரு வழக்கமான நடைமுறை என விளக்கமளித்துள்ளார்.
எனினும் சஹரான்பூரில் நடைபெறும் மகா பஞ்சாயத்தில் திட்டமிட்டபடி கலந்துகொள்ள உள்ளதாக பிரியங்கா காந்தி உறுதி தெரிவித்துள்ளார்.