மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,297 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,52,905ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 25 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 51,415ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 30,265 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 6,107 பேர் குணமடைந்தனர்.
இதுவரை 19,70,053 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.