முகப்பு
இந்தியா

குறைந்தபட்ச ஆதரவு விலை: காங். கட்சிக்கு பாஜக சவால்

குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களில் இல்லை என்பதை காங்கிரஸ் நிரூபிக்கத் தயாரா என்று பாஜக மாநில நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
மாநிலங்களவையில் அனுராக் தாக்குர்
பகிர்:

குறைந்தபட்ச ஆதரவு விலை புதிய வேளாண் சட்டங்களில் இல்லை என்பதை காங்கிரஸ் நிரூபிக்கத் தயாரா என்று பாஜக மாநில நிதித்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் இன்று (பிப்.12) காலை பேசிய அவர், அடுத்தக்கட்ட இந்தியாவை உருவாக்கும் அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன. இதன் மூலம் வலிமையான சுயசார்புடைய இந்தியா உருவாகும். 

பொருளாதார மற்றும் உற்பத்தி மையமாக நாட்டை மாற்றுவதற்கான வழிகளை அவை உருவாக்கும் என்று கூறினார்.

வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர், மத்திய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி முறை இல்லை என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தத் தயாரா?. இந்தியாவை முன்னோக்கி எடுத்துச் செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →