இந்தியா

தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட்: நிர்மலா சீதாராமன்

DIN


புது தில்லி: தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் சனிக்கிழமை அமா்வு, மாலை 4 மணிக்குப் பதிலாக, காலை 10 மணிக்கே நடைபெறும் என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு மக்களை தொடங்கியதும், பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த உலகின் மிக முக்கிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் வகையிலேயே பொருளாதார சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா பேரிடர் காரணமாக, இந்தியாவின் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கான திட்டங்களை ஒருபோதும் கைவிட முடியாது. தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

பட்ஜெட் உரையின் போதே நான் தெளிவாகக் கூறியிருந்தேன், சுகாதாரத் துறையில் மிகச் சீரான அணுகுமுறையை மத்திய அரசு கையாண்டு வருகிறது என்று. முதலில், வரும் முன் காப்போம் என்ற கொள்கையையும், பிறகு, நோய் வந்தபின் அதனை போக்கும் வகையிலும், மக்களின் நலனை கருத்தில் கொண்டும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த அமா்வுக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது பகுதி மாா்ச் 8-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT