குஜராத் டைல்ஸ் தொழிற்சாலையில் விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
குஜராத்தின் மோர்பியில் உள்ள டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
குஜராத்தின் மோர்பியில் உள்ள டைல்ஸ் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மோர்பி மாவட்டத்தின் ரங்க்பூர் கிராமத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை மாலை பீங்கான் களிமண் கொண்ட ஆறு முதல் ஏழு குழிகள் சரிந்து விழுந்தன.
இந்த விபத்தில் சிக்கிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்துக்குப் பின்னர் காணாமல் போன ஒரு பெண் தொழிலாளியின் சடலம் 30 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தீயணைப்பு அதிகாரி ஹிடேஷ் தேவ் தெரிவித்தார்.
இறந்த பெண் சோனம்பென் புராபியா என அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார். இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டைல்ஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 60 டன் களிமண்ணைக் கொண்ட குழிகள் சரிந்து விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.