முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார் கிணற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
Maha: Two men drown after car falls into well in Jalna
பகிர்:

மகாராஷ்டிரத்தின் ஜல்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கார் கிணற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் சனிக்கிழமை தெரிவித்தனர். 

புல்தானா மாவட்டத்தில் உள்ள தீல்கான் ராஜாவை நோக்கிப் பயணித்த கார் இருட்டில் தவறான சாலையில் சென்றதையடுத்து, ஜாம்வாடியில் உள்ள கிணற்றில் விழுந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

காரில் பயணித்த இருவர் பங்க்ரி சாலையில் வசிக்கும் ஷேக் அப்துல் மன்னன் சாகீர்(26) மற்றும் சாஹு நகரில் வசிக்கும் அசார் குரேஷி (23) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 

ஆழமான கிணறு என்பதால் உடல்களை மீட்டெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கிரேன் மூலம் கிணற்றிலிருந்த காரை வெளியே எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.