இந்தியாவின் 17 மாநிலங்களில் கரோனா பலி இல்லை: சுகாதாரத் துறை
கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவரும் நிலையில், நாட்டில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவரும் நிலையில், நாட்டில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவக்கு ஒருவரும் பலியாகவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கரோனா பலி கூட பதிவாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட், புதுச்சேரி, சண்டிகர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர், சிக்கிம், மேகாலயம், லடாக், மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார், திரிபுரா, லட்சத்தீவுகள், அருணாசலம், டாமன் மற்றும் டையு உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில் சுமார் 13 மாநிலங்களில் 1 - 5 கரோனா பலி மட்டுமே பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.