முகப்பு
இந்தியா

கேரளத்தில் ஒரே கட்டமாக தேர்தல்: அரசியல் கட்சிகள் கோரிக்கை

​கேரளத்தில் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என அந்த மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையக் குழு
பகிர்:


கேரளத்தில் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என அந்த மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளன.

சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் வெள்ளிக்கிழமை கேரளம் சென்றனர். அங்குள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையக் குழு சனிக்கிழமை ஆலோசனை நடத்தியது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களிடம் கூறியது:

"விஷு பண்டிகைக்கு முன்பு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். ஏப்ரல் 12-க்கு முன்பு தேர்தல் நடத்தக் கோரியுள்ளோம்." 

காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி. சாக்கோ கூறியது:

"ஏப்ரலில் பல்வேறு பண்டிகைகள் இருப்பதால் ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 12-க்கு இடையிலான நாள்கள்தான் தேர்தலுக்கு ஏற்றதாக இருக்கும்."

இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியும் இதுமாதிரியான கோரிக்கையையே வைத்துள்ளது. பாஜகவும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தாலும், மே மாதம் நடத்த விரும்புகிறது.

மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் டிகாராம் மீனா, தலைமைச் செயலர் விஷ்வாஸ் மேத்தா மற்றும் மாநில காவல் துறைத் தலைவர் லோக்நாத் பேரா ஆகியோருடன் தேர்தல் ஆணையக் குழு ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்துகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →