முகப்பு
இந்தியா

உத்தரகண்ட் வெள்ளம்: உரிமையாளருக்காக காத்திருக்கும் வளர்ப்பு நாய்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக அவரது வளர்ப்பு நாய் கடந்த 3 நாள்களாக காத்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 13 பிப்ரவரி, 2021 at 4:36 PM
உத்தரகண்ட் வெள்ளம்: உரிமையாளருக்காக காத்திருக்கும் வளர்ப்பு நாய்
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக அவரது வளர்ப்பு நாய் கடந்த 3 நாள்களாக காத்திருக்கும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமடம் என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கினால் அருகில் இருந்த மின் நிலையங்களில் பணியாற்றி வந்தவா்களில் 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். மேலும் வெள்ளப்பருக்கில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் தபோவன் அணைக்கட்டு பகுதியில் பணியாற்றி வந்த தனது உரிமையாளரின் வருகைக்காக 2 வயதான வளர்ப்பு நாய் ஒன்று காத்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

’பிளாக்கி’ என செல்லமாக அழைக்கப்படும் இந்த நாய் வெள்ளத்தில் காணாமல் போன தனது உரிமையாளரின் வருகையை எதிர்பார்த்து கடந்த 3 நாள்களாக அணைக்கட்டில் உள்ள சுரங்கப் பகுதியில் சுற்றி வருகிறது.

உரிமையாளர் மீதான வளர்ப்பு நாயின் பாசம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.