உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் சுட்டுக்கொலை
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் அப்சல்(18). இவர், நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்றதோடு வீடு திரும்பவில்லையாம்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.
இந்த நிலையில் இன்று காலை அப்சல் உடலை ஆற்றின் கரை அருகே இருந்து காவல்துறையினர் மீட்டனர்.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாகவும் சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அப்சல் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.