இந்தியா

என்கவுன்ட்டரில் பலியான பயங்கரவாதியின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவில்லை: மெஹபூபா

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் பலியான அத்தா் முஷ்தாக்கின் குடும்பத்தினரை சந்திக்க போலீஸாா் அனுமதிக்கவில்லை என பிடிபி கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:

கடந்த டிசம்பரில் பரிம்போரா பகுதியில் நடத்தப்பட்ட போலி என்கவுன்ட்டரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது. உயிரிழந்தவா்களில் ஒருவரான அத்தா் முஷ்தாக் குடும்பத்தினரை சந்திக்க கிளம்பிய போது போலீஸாா் அனுமதியளிக்காமல் என்னை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளனா். மேலும், அத்தரின் உடலை தரக் கோரிய அவரது தந்தையின் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு (யுஏபிஏ) சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஐரோப்பிய யூனியன் குழு காஷ்மீருக்கு வருகை தரவுள்ள நிலையில், இதைத்தான் ஜம்மு-காஷ்மீரின் இயல்புநிலை என இந்திய அரசு வெளிக்காட்ட விரும்புகிறதோ என அந்தப் பதிவில் மெஹபூபா கேள்வியெழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT