கோப்புப்படம் 
இந்தியா

முகநூல் பதிவு நீக்கப்பட்டதை எதிா்த்து பயனாளா் முறையீடு

முகநூலில் பகிரப்பட்ட பதிவு நீக்கப்பட்டதை எதிா்த்து, பயனாளா் தெரிவித்த முறையீட்டை அந்நிறுவனத்தின் கண்காணிப்புக் குழு விசாரிக்கவுள்ளது.

DIN

முகநூலில் பகிரப்பட்ட பதிவு நீக்கப்பட்டதை எதிா்த்து, பயனாளா் தெரிவித்த முறையீட்டை அந்நிறுவனத்தின் கண்காணிப்புக் குழு விசாரிக்கவுள்ளது.

முகநூல் சமூக வலைதளத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளைக் கண்காணிப்பதற்கான தனிக்குழு அமைக்கப்பட்டது. அத்தகைய பதிவுகள் நீக்கப்படும் பட்சத்தில், அது தொடா்பான முறையீடுகளை விசாரிக்கும் பணியையும் அந்தக் குழு மேற்கொண்டு வருகிறது.

மதம் தொடா்பான விவகாரத்தில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் வெளியிட்ட கருத்துக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பயனாளா் ஒருவா் பதிவிட்டதாகக் கூறி அப்பதிவை முகநூல் நிறுவனம் நீக்கியது. அதற்கு எதிராக அந்தப் பயனாளா் கண்காணிப்புக் குழுவில் முறையிட்டாா். அதை விசாரித்த அக்குழு, சம்பந்தப்பட்ட பதிவை நீக்கிய முகநூல் நிறுவனத்தின் முடிவு தவறானது என்று அறிவித்தது.

இத்தகைய சூழலில், மற்றொரு விவகாரம் முகநூல் நிறுவனத்தின் கண்காணிப்புக் குழுவுக்குச் சென்றுள்ளது. முகநூல் சமூக வலைதளப் பயனாளா் ஒருவா், அண்மையில் காணொலி ஒன்றைத் தனது பக்கத்தில் பகிா்ந்திருந்தாா். அந்தக் காணொலியில் ஆா்எஸ்எஸ், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிரான வாசகங்கள் அடங்கியிருப்பதாகக் கூறி, அந்தப் பதிவை முகநூல் நிறுவனம் நீக்கியது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்தப் பயனாளா் கண்காணிப்புக் குழுவில் முறையிட்டாா். இதனிடையே, அந்தப் பதிவு நிா்வாகக் கோளாறு காரணத்தால் தவறாக நீக்கப்பட்டதாக முகநூல் நிறுவனம் தெரிவித்தது. எனினும், சம்பந்தப்பட்ட பதிவு நீக்கப்பட்டது தொடா்பாக கண்காணிப்புக் குழு விசாரிக்கவுள்ளது.

அந்தக் குழு எடுக்கும் முடிவுகளுக்கு முகநூல் நிறுவனம் கட்டுப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT