இந்தியா

குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கரோனா பாதிப்பு

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார். 

PTI

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார். 

64 வயதான விஜய் ரூபானி, குஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அப்போது திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். இந்நிலையில், அவர் யு என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரூபானியின் மாதிரி ஞாயிற்றுக்கிழமை இரவு சேகரிக்கப்பட்டு ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT