மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,365 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை 3,365 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை 3,365 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,67,643 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,105 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,78,708 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் 51,552 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய தேதியில் அங்கு 36,201 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.