இந்தியா

ம.பி.யில் பேருந்து விபத்து: பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 

ANI

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 

சீதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சட்னாவுக்குச் செல்லும் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் தவறி விழுந்தது. இந்த விபத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் சௌத்ரி கூறுகையில், 

சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் கரையிலிருந்த 7 பேரை உயிருடன் மீட்டனர். தற்போது, மேலும் 39 பேரின் சடலங்களை கால்வாயிலிருந்து மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து விவாதிக்க அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரு அமைச்சர்கள் அடங்கிய குழுவைச் சம்பவ இடத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ. 90.95 ஆக நிறைவு!

கிரையோதெரபி: புற்றுநோய் சிகிச்சையின் மைல்கல்! கட்டிகளை உறைய வைத்து அழிக்கும்!

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

SCROLL FOR NEXT