இந்தியா

புணே-மும்பை நெடுஞ்சாலையில் சாலை விபத்து: 5 பேர் பலி

PTI

மகாராஷ்டிரத்தின் புணே-மும்பை அதிவேக நெடுஞ்சாலையில் டிரக் ஒன்று இரண்டு கார்கள் மற்றும் சுமை லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சில காயமடைந்துள்ளனர். 

விபத்தில் இறந்தவர்களில் நவி மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் (என்.எம்.எம்.சி) பணிபுரிந்துவரும் கால்நடை மருத்துவர் ஆவார். அவர் தனது குடும்பத்தினருடன் புணேவிலிருந்து நவி மும்பைக்கு  காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கலபூர் டோல் பிளாசா அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது. பின்னால் இருந்து வந்த லாரி இரண்டு கார்களையும் ஒரு சரக்கு வாகனத்தையும் மோதியது. டிரக் வேகமாக வந்ததின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. 

இறந்தவர்கள் கால்நடை மருத்துவர் டாக்டர் வியாபவ் ஜுன்ஜாரே (41), அவரது தாயார் (63), மனைவி (38) மற்றும் ஒரு மகள் (5) என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு காரில் ஒருவரும், தம்பதியினரின் 11 வயது மகன் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT