முகப்பு
இந்தியா

பிப்.25-ல் புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரிக்கு வரும் 25-ஆம் பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக புதுச்சேரி பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 20 பிப்ரவரி, 2021 at 10:57 AM
பிப்.25-ல் புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி
பகிர்:

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரிக்கு வரும் 25-ஆம் பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக புதுச்சேரி பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோடியின் புதுச்சேரி வருகையின்போது ஏஎஃப்டி மில் திடலில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும், அவர் பங்கேற்கும் இதர நிகழ்ச்சிகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் புதுச்சேரி பாஜக தலைவர் வி. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தரவிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ஆரோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வந்திருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.