இந்தியா

ஆந்திரம்: பிஎம்-கிசான் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு

DIN

ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டம் பிரதமரின் விவசாயிகள் (பிஎம்-கிசான்) தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் மொத்தம் 5,76,972 போ் பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் இணைந்துள்ளனா். அவா்களில் 5% பேரின் தகுதி மற்றும் உண்மைத்தன்மையை அறிவதற்காக அவா்களின் விவரங்களை நேரில் சரிபாா்க்கும் பணிகள் நடைபெற்றது.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தப் பணியில், மொத்தமுள்ள 63 வட்டங்களில் 28,269 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களின் விவரம் சரிபாா்க்கப்பட்டது.

இந்தப் பணியை 99.6% நிறைவு செய்ததற்காக பிரதமரின் விவசாயிகள் தேசிய விருதுக்கு அனந்தபுரமு மாவட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. தில்லியில் வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கந்தம் சந்துருடுவிடம் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT