முகப்பு
இந்தியா

உ.பி.,யில் பல்வேறு சாலை விபத்துகளில் 12 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். 

Updated On : 1 ஜனவரி, 2021 at 4:24 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:40 AM

உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். 
உத்தப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பனிப் பொழிவு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் இன்று நிகழ்ந்த சாலை விபத்துகளில் 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். 
உன்னவ் மாவட்டத்தில் உள்ள லக்னௌ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் தனியார் பேருந்தும், கண்டெய்னர் லாரியும் மோதியதில் 4 பேர் பலியானார்கள். சிலர் காயமடைந்தனர். இதேபோல் ஆக்ராவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில்  நிகழ்ந்த 2 சாலை விபத்துகளில் 5 பேர் பலியானார்கள். 
மொரதாபாத்தில் உள்ள மொரதாபாத்-பிஜ்னூர் நெடுச்சாலையில் கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.