இந்தியா

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களைக் கண்டறியும் பணி தீவிரம்: சுகாதாரத்துறை

DIN


கர்நாடகத்தில் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் 75 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

அவர்களது இருப்பிடங்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் பரவி வரும் புதியவகை கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகின்றனர். 

கர்நாடகத்தில் இதுவரை 7 பேருக்கு புதியவகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 31 பேரின் மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனிலிருந்து வந்ததாக 75 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். 

பிரிட்டனிலிருந்து வந்தவர்களின் சிலரது முகவரிகள் கண்டறிய இயலவில்லை. அவர்களது முகவரிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT