நாடு முழுவதும் உற்சாகமாக புத்தாண்டு கொண்டாட்டம் 
இந்தியா

புத்தாண்டு 2021: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்

நாடு முழுவதும் புத்தாண்டு 2021-ஐ மக்கள் உற்சாகமுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கோயிகளிலும், தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

DIN

நாடு முழுவதும் புத்தாண்டு 2021-ஐ மக்கள் உற்சாகமுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு புதிய  நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று கோயிகளிலும், தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பெங்களூருவில் லஷ்மி நரசிம்மர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் ஆத்யபித் காளி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விரைவில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று வேண்டியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

பிகார் மாநிலம் பாட்னாவில் மஹாவீர் கோயிலில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. 2021-ம் ஆண்டின் முதல் வழிபாட்டில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை சித்தி விநாயகர் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள தங்கக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி புத்தாண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். கடும் குளிரையும் பொருள்படுத்தாமல், ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

மேற்கு வங்க ஹூக்ளி நதிக்கரையிலும், ஒடிசா, கோவா கடற்கரையிலும் 2021-ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தை வரவேற்று மக்கள் புத்தாண்டை கொண்டாடினர்.

கேரளம், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேவாலயங்களில் மக்கள் நள்ளிரவு முதலே சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

நாகூர் தர்காவிலும், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களிலுள்ள பள்ளி வாசல்களிலும் புத்தாண்டையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூரில் பயங்கரவாத சதித் திட்டம்! 8 பேரை கைது செய்தது தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

SCROLL FOR NEXT