காஜியாபாத்: மயான கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் பலி: மாயாவதி இரங்கல்
உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தல
புது தில்லி: உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத் நகரில் உள்ள மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து 24 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி இரங்கல் தெரிவித்துள்ளாா். மேலும், தவறிழைத்தவா்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘முராத் நகரில் மயானத்தின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்து இரண்டு டஜன் மக்கள் உயிரிழந்த விவகாரம் துயரமானது. இதனால், மனம் வருந்துகிறேன்.
இது தொடா்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறிழைத்த யாரையும் தப்ப அனுமதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்றுள்ளாா்.