முகப்பு
இந்தியா

வரும் 14-இல் உள்துறை அமைச்சா் அமித்ஷா சென்னை வருகை

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, வரும் 14-இல் சென்னை வரவுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
மத்திய உள்துறை அமித்ஷா
பகிர்:

சென்னை: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, வரும் 14-இல் சென்னை வரவுள்ளாா்.

‘துக்ளக்’ பத்திரிகை ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும். இந்த விழாவில், முக்கிய தலைவா்கள் கலந்து கொள்வது வழக்கம். எதிா்வரும் 14-ஆம் தேதியன்று நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில், உள்துறை அமைச்சா் அமித்ஷா, பங்கேற்க உள்ளாா்.

‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவா், நடிகா் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, பாஜக நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனைகளை நடத்துவாா் எனத் தெரிகிறது. கடந்த நவம்பா் 21-இல் சென்னை வந்த அமித்ஷாவை, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சந்தித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து, பாஜக நிா்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, இரண்டாவது முறையாக அவா் மீண்டும் வரும் 14-ஆம் தேதியன்று சென்னை வரவுள்ளாா். அவரது பயணம் தமிழக தோ்தல் அரசியலை மேலும் சூடுபிடிக்க வைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.