மோசி அரசின் அக்கறையின்மையால் போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகி இருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 41 நாள்களாக தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தில்லியில் நிலவி வரும் கடுமையான குளிர் மற்றும் கனமழை காரணமாக இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 60 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
இதனிடையே மத்திய அரசின் அக்கறையின்மையே விவசாயிகள் உயிரிழப்பிற்குக் காரணம் என ராகுல் காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “மோடி அரசின் அக்கறையின்மை மற்றும் ஆணவமே 60க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிரைக் கொன்றது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “விவசாயிகளின் கண்ணீரைத் துடைப்பதற்குப் பதிலாக, கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் கொண்டு தாக்குவதில் மத்திய அரசு வேகமாக உள்ளது. இத்தகைய மிருகத்தனம், அரசின் நண்பர்களான முதலாளிகளின் வணிக நலன்களை மேம்படுத்துவதற்காக மட்டுமே” என தெரிவித்துள்ள அவர் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.