முகப்பு
இந்தியா

ஜன.13 முதல் கரோனா தடுப்பூசி செலுத்த தயார்: மத்திய அரசு

அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
கோப்புப்படம்
பகிர்:


அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த தேதியிலிருந்து 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சக பிரதிநிதிகள் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கரோனா தடுப்பூசி ஒத்திகையில் கிடைத்த கருத்துகளின்படி, அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதிலிருந்து 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி செலுத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 13-ம் தேதி முதல் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்னல், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய 4 இடங்களில் பிரதான தடுப்பூசி மையங்கள் உள்ளன. நாட்டில் மொத்தம் 37 தடுப்பூசி மையங்கள் உள்ளன. தடுப்பூசிகள் அங்கு மொத்தமாக சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் கோவேக்ஸின் தடுப்பூசியையும், கோவிஷீல்ட் தடுப்பூசியையும் பொது மக்களுக்கு செலுத்த மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.