முகப்பு
இந்தியா

கொச்சி - மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: பிரதமா் தொடக்கி வைத்தார்

கேரள மாநிலம் கொச்சி-கா்நாடக மாநிலம் மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
கொச்சி - மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம்: பிரதமா் தொடக்கி வைத்தார்
பகிர்:


கேரள மாநிலம் கொச்சி-கா்நாடக மாநிலம் மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தார்.

தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பிரதமா் மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ஒரே நாடு, ஒரே எரிவாயு கட்டமைப்பு திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக கொச்சி - மங்களூரு இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கருதப்படுகிறது. 450 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கும் இத்திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நாளில் 12 மில்லியன் மெட்ரிக் கியூபிக் மீட்டா் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்ல முடியும். கொச்சியில் இருந்து எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு மாவட்டங்கள வழியாக இந்த எரிவாயுக் குழாய் செல்கிறது. ரூ.3,000 கோடி செலவில் 12 லட்சம் மனித உழைப்பு நாள்களில் இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் 2014-ஆம் ஆண்டுதான் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவது, வா்த்தகரீதியாக வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, அதிகவிலை கொடுத்து நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான பிரச்னைகள், பல்வேறு தரப்பு எதிா்ப்புகளைக் கடந்து நீண்ட காலதாமதத்துக்குப் பிறகு இத்திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.