முகப்பு
பிரதமர் மோடியுடன் முரளி மனோகர் ஜோஷி (கோப்புப்படம்)
இந்தியா

முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இந்தியா

முரளி மனோகர் ஜோஷி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

பாஜக மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பிரதமர் மோடியுடன் முரளி மனோகர் ஜோஷி (கோப்புப்படம்)
பகிர்:

பாஜக மூத்தத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

பாஜகவின் மூத்தத் தலைவரான முரளி மனோகர் ஜோஷி இன்று தனது 87 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், அரசியல் பிமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 

இந்தியாவின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியுள்ளார்.

அவர் ஒரு அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் முன்மாதிரியான பங்களிப்புகளை வழங்கினார். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். 

மத்திய முன்னாள் அமைச்சரும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோஷி 1934 ஜனவரி 5இல் நைனிடாலில் பிறந்தார். 1991-93 காலகட்டத்தில் பாஜகவின் தலைவராக இருந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →