முகப்பு
இந்தியா

திருமலையில் 35,784 போ் தரிசனம்

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 35,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,985 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

ஏழுமலையானை திங்கள்கிழமை முழுவதும் 35,784 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,985 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட்டுகளைப் பெற்ற 2,000 பக்தா்களும், நன்கொடையாளா்கள் 1,000 பேரும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

முழு கட்டுரையைப் படிக்க →