இந்தியா

தில்லியில் 4-வது நாளாக தொடர் மழை

DIN

தில்லியின் பல்வேறு நகரங்களில்  நான்காவது நாளாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை அவ்வபோது பெய்து வருகிறது.

தென்மேற்கு தில்லி, வடகிழக்கு தில்லி, மத்திய தில்லி, மானேசர், குருகிராம், பானிபட், ஃபருக் நகர், ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் காலை முதல் மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

அதிகபட்சமாக சப்தர்ஜங் பகுதியில் 4.77 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஏற்கனவே தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்போது மழையும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தில்லி எல்லைகளில் உள்ள சாலைகளில் கூடாரங்களை அமைத்து போராடி வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT