இந்தியா

ம.பி.யில் பறவைக் காய்ச்சல்: முதல்வர் இன்று ஆலோசனை

DIN

மத்தியப் பிரதேசத்தில் பறவைக் காய்ச்சலைத்  தடுப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோட்டயத்தில் ஒரே இடத்தில் 1,600 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது

மேலும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே இதனைத் தடுக்கும் வகையில் அதிகாரிகளுடன் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதில் பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT