முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 6,394 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,394 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,394 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 6,394 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 7,90,883 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 3,209 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 5,110 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 7,22,421 ஆக உள்ளது. தற்போது 65,057 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →