இந்தியா

ஒடிசா இரும்பு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு: 4 பேர் பலி

DIN

புவனேஸ்வர்: ஒடிசா இரும்புத் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இயங்கி வரும் ரெளர்கீலா இரும்பு தொழிற்சாலையில் நிலக்கரி ரசாயனப் பிரிவில் இன்று 10 பேர் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே நிலக்கரி ரசாயனப் பிரிவில் ஏற்பட்ட கசிவில் முதற்கட்டமாக 4 பேருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அவர்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தபோது 4 பேர் உயிரிழந்தனர். மேலும் உடன் பணியாற்றிய இருவருக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கார்பன் மோனாக்ஸைடு வாயுக் கசிவால் நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு தொழிற்சாலை வழக்கம்போன்று இயங்கி வருகிறது. 

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தொழிற்சாலை சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT