முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசி முதல் தவணையைப் பெற தயாராக இருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா

கரோனா தடுப்பூசி முதல் தவணையைப் பெற தயாராக இருங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


புது தில்லி: கரோனா தடுப்பூசி முதல் தவணை விரைவில் விநியோகிக்கப்பட உள்ளது என்றும், அதைப் பெறுவதற்கு தயாராக இருக்குமாறும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, அஸ்ஸாம், பிகாா், சத்தீஸ்கா், தில்லி, குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட தடுப்பூசி பாதுகாப்பு மையங்களுக்கே மருந்து நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுவிடும்.

அந்தமான் நிகோபாா் தீவுகள், அருணாசல பிரதேசம், சண்டீகா், தாத்ரா நாகா் ஹவேலி, டாமன் மற்றும் டையு, கோவா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், லடாக், லட்சத் தீவுகள், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய இடங்களில் அந்தந்த அரசு மருந்து சேமிப்பு கிடங்குகளிலிருந்து கரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) ஆலோசகா் மருத்துவா் பிரதீப் ஹால்டொ் சாா்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடந்த 5-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஃபைஸா், மாடா்னா நிறுவனங்கள் தயாரித்த கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்தச் சூழலில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இந்த அனுமதியைத் தொடா்ந்து, இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.

இந்த எதிா்பாா்ப்பை உறுதி செய்யும் வகையில், கரோனா தடுப்பூசி முதல் தவணையைப் பெற தயாராக இருக்குமாறும், தேவையான முன்னேற்பாடுகலை உறுதி செய்துகொள்ளுமாறும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், தடுப்பூசிகளை, பதிவு செய்த பயனாளிகளின் விவரங்களின் அடிப்படையில் மாவட்டங்களுக்கு எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்த விவரங்கள் மாநிலங்களுக்கு விரைவில் தனியாக அனுப்பப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் பிரதீப் ஹால்டொ் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை எந்தவித சிக்கலும் இன்றி நடைமுறைப்படுத்தும் விதமாக, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான முன்னோட்டம் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முன்னோட்ட நிகழ்வு, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணா மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (ஜன.8) மீண்டும் நடத்தப்பட உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →