கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 51 ஆசிரியர்களுக்கும், 4 மாணவர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகள் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.