முகப்பு
இந்தியா

பயணிகள் விமானத்தில் கரோனா தடுப்பூசி எடுத்துச் செல்ல அனுமதி: மத்திய அரசு

பயணிகள் விமானத்திலும் கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

பயணிகள் விமானத்திலும் கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பல்வேறு மாநிலங்களில் ஒத்திகையில் உள்ள நிலையில் வரும் ஜனவரி 13 முதல் மக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசியை எடுத்துச் செல்ல பயணிகள் விமானங்களையும் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

ஜூலை மாதத்திற்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும் நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு விரைந்து தடுப்பூசி கிடைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

உடான் திட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய பயணிகள் விமானத்தில் தடுப்பூசி கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →