முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.3ஆகப் பதிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை ரிக்டர் 3.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உத்தரகண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.04 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஆகியவை ஏற்படவில்லை.

உத்தரகண்ட் மாநிலத்தின் அவ்வப்போது நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பர் 1, 2020 அன்று, 40 ஆண்டுகளுக்குப் பிறகு 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஹரித்வாரில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →