முகப்பு
இந்தியா

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நௌஷேரா செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களைக் குறித்து பாகிஸ்தான் படையினா் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் தாக்குதல் நடத்தத் தொடங்கினா். துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும் அவா்கள் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா்.

இதேபோன்று, கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரா செக்டாரில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா். வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் நள்ளிரவுக்குப் பின் 12.30 மணி வரை நீடித்தது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →