இந்தியா

பறவைக் காய்ச்சல்: பஞ்சாப் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

ANI

பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து கோழி உள்ளிட்ட இறைச்சிகளை இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அம்மாநில கால்நடை வளர்ப்புத் துறையின் தலைமைச் செயலாளர் வி.கே. ஜன்ஜுவா தெரிவித்துள்ளார்.

கால்நடை பராமமரிப்புத் துறையுடன் ஆலோசனை செய்த பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பரவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

தற்போது கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல், ஹரியாணா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

அண்ணாமலைப் பல்கலை. பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் மீட்பு

காலாவதியான பொருள்கள் விற்பனை: பல்பொருள் அங்காடிக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT