முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள்

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப்படம்
பகிர்:

நாட்டில் இதுவரை 18.10 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதிக பரவல் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறது.

அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கையால் கரோனா பரவல் குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,43,307 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் இதுவரை மொத்தமாக செய்யப்பட்டுள்ள கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 18,10,96,622-ஆக அதிகரித்துள்ளது.

1,201 அரசு மற்றும் 1,115 தனியார் ஆய்வகங்களை உள்ளடக்கிய 2,316 பரிசோதனை ஆய்வகங்களின் வாயிலாக நாளொன்றின் பரிசோதனை திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 96.42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.