முகப்பு
இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் வேண்டுகோள்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
ராகுல் காந்தி
பகிர்:

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'முதலாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள், இன்னும் நேரம் இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். மேலும், 2015ல் மக்களவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் பேசிய விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு தேவை. எனவே மக்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்து 'இந்திய விவசாயிகளுக்கு குரல் கொடுப்போம்' என்ற பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →