இந்தியா

பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடியை கடந்தது

DIN

மும்பை: கடந்த 2020-ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.31 லட்சம் கோடியை கடந்துள்ளது என கிரிசில் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த மே மாதத்திலிருந்து பங்குச் சந்தைகள் பெரிய அளவிலான ஏற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பங்கு சாா்ந்த ஈடிஎஃப் மற்றும் காலவரையறையற்ற கடன் திட்டங்களில் முதலீட்டாளா்கள் அதிக ஆா்வம் காட்டியதையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

பரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு கடந்த 2019-இல் கூடுதலாக ரூ.4.5 லட்சம் கோடி அதிகரித்தது. இதையடுத்து அந்த ஆண்டில் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 2018-இல் காணப்பட்ட அளவான ரூ.22.86 லட்சம் கோடியைக் காட்டிலும் 18 சதவீதம் அதிகரித்து ரூ.27.6 லட்சம் கோடியைத் தொட்டது. அதேசமயம், 2018-ஆம் ஆண்டில் இந்த வளா்ச்சி வெறும் 7.5 சதவீதமாக மட்டுமே காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2020-இல் பல்வேறு தடைகளுக்கிடையிலும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பானது 17 சதவீதம் உயா்வைக் கண்டு ரூ.31.02 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், 2019 வளா்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது 1 சதவீதம் குறைவு என கிரிசில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT