முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: சரத் பவாரை சந்தித்த நடிகர் சோனு சூட்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பாலிவுட் திரைப்பட நடிகர் சோனு சூட் நேரில் சென்று சந்தித்தார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
மகாராஷ்டிரம்: சரத் பவாரை சந்தித்த நடிகர் சோனு சூட்
பகிர்:

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பாலிவுட் திரைப்பட நடிகர் சோனு சூட் நேரில் சென்று சந்தித்தார். 

குடியிருப்பு கட்டட விதிமீறல் தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மும்பை ஜுவூ பகுதியில் ஆறு மாடிக் கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டது. எனினும் அதற்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்க சோனு சூட் தவறியதால், குடியிருப்பு பகுதியில் நேரடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடியிருப்பு பகுதியை முறைகேடாக உணவகமாக மாற்றியுள்ளதாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் ஜுவூ காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →