முகப்பு
இந்தியா

தெலங்கானா: கரோனா பாதிப்பு 2.90 லட்சமாக உயர்வு

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.90 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
COVID-19: 331 new cases, 3 deaths in Telangana
பகிர்:

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.90 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,90,640-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 3 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,571-ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,84,611-ஆக அதிகரித்துள்ளது.  கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 97.92 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →