இந்தியா

தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி மையங்கள்: கேஜரிவால் அறிவிப்பு

DIN

தில்லியில் 81 இடங்களில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிமமை தெரிவித்தார்.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்த கேஜரிவால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை பின்னாளில் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT