ஒடிசாவில் 10 நக்சல்கள் சரண்!
ஒடிசாவில் 10 நக்சல்கள் சரணடைந்தது குறித்து...
ஒடிசாவில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் சரண் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம், காந்த்மாலின் புல்பானியில் 10 நக்சல்கள் காவல்துறையினரிடம் இன்று சரணடைந்தனர். அவர்களில் ஒரு மாநிலக் குழு உறுப்பினர், ஒரு மண்டலக் குழு உறுப்பினர், இரண்டு பகுதிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆறு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.
நாட்டிலிருந்து நக்சல்வாதத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மார்ச் 31, 2026 அன்று வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதன்படி, இன்று சத்தீஸ்கரிலும் 108 நக்சல்கள் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
மேலும், வருங்காலங்களில் பல நக்சல்கள் கூட்டாக சரணடைவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
10 Naxalites surrender before police in Odisha.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.