முகப்பு
இந்தியா

பிரிட்டன் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜன. 31 வரை நீட்டிப்பு: தில்லி அரசு

பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது. பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜன

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
கோப்புப்படம்
பகிர்:


பிரிட்டனிலிருந்து தில்லி திரும்பும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக தில்லி அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

ஜனவரி 14 வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தில்லி தலைமைச் செயல் அதிகாரி விஜயகுமார் தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

தில்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி விமான நிலையத்தில் ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தும் மையத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments