முகப்பு
இந்தியா

கேரளத்தில் புதிதாக 5,624 பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:18 PM
கேரளத்தில் புதிதாக 5,624 பேருக்கு கரோனா (கோப்புப்படம்)
பகிர்:

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,624  பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Advertisement

கரோனாவால் பாதிக்கப்பட்டு 67,496 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 7,65,757-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  23 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,397-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments